Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
``அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தகுழப்பமும் இல்லை. எங்களது பொதுஎதிரி திமுக” என, பாஜக மாநிலதுணைத் தலைவர் கே.அண்ணா மலை தெரிவித்தார்.
தூத்துக்குடி கின்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் சார்பில், கந்தசஷ்டி கவசத்தை முழுமையாக ஒப்புவிக்கும் 100 பேருக்கு தங்க நாணயம்பரிசாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 100பேருக்கு தங்க நாணயம் பரிசளிக்கும் விழா நேற்று நடைபெற்றது.
மதுரை கணேஷா குழும தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். கின்ஸ் அகாடமி தலைவர் எஸ்.பேச்சிமுத்து வரவேற்றார். பாஜகமாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை, தலா அரை கிராம்தங்க நாணயங்களை வழங்கினார். மாணவி எம்.ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறிய தாவது: வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரமும், எந்த தொகுதி வேண்டும் என கேட்கும் அதிகார மும், பாஜக மாநில தலைமைக்கு கிடையாது. கட்சியின் மத்திய தலைமை தான் இதனை முடிவு செய்யும். தமிழகத்தில் பாஜக போட்டியிடப் போவதாக வெளியான 38 தொகுதிகள் அடங்கிய பட்டியல் பாஜக தயாரித்தது அல்ல. குழப்பத்தை ஏற்படுத்த யாரோ வெளியிட்ட பட்டியல் அது.
எந்தெந்த தொகுதியைக் கேட்பது என்பது குறித்து முடிவு செய்ய, கட்சிதலைமை சார்பில் குழு அமைக்கப்படும். அதன்பிறகே பேசி முடிவு செய்யப்படும். அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. கூட்டணி வலுவாக உள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும். எங்களது பொது எதிரி திமுக. கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிடுவேன். எந்ததொகுதியை சொன்னாலும் அங்குபோட்டியிட தயாராக இருக்கிறேன்.தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் கட்சி பேதமின்றி தண்டிக்கப்படவேண்டும் என்பதே, முன்னாள் போலீஸ் அதிகாரியான எனது கருத்து” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT