Published : 06 Jan 2021 03:14 AM
Last Updated : 06 Jan 2021 03:14 AM
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தக்காளி, முட்டைகோஸ், சிவப்பு மிளகாய் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 2021-21-ல் ரபி பருவத்தில் வாழை, தக்காளி, கத்தரி, முட்டைக்கோஸ், சிவப்பு மிளகாய் மற்றும் உருளைக் கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டம் காப்பீட்டு நிறுவனமான இப்கோ டோக்யோ ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைவதற்கு மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் முட்டைக் கோஸ், உருளைக் கிழங்கு மற்றும் சிவப்பு மிளகாய்க்கு வருகிற 31-ம் தேதி வரையும், தக்காளி, வாழை மற்றும் கத்திரி பயிர்களுக்கு வருகிற மார்ச் 1-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம். மேலும், ஏக்கருக்கு 5 சதவீத காப்பீட்டு தொகையாக வாழைக்கு ரூ.3230, தக்காளிக்கு ரூ.1767.50, கத்திரிக்கு ரூ.1247.50, உருளைக் கிழங்கிற்கு ரூ.1602.50, முட்டைகோஸிற்கு ரூ.1210, சிவப்பு மிளகாய்க்கு ரூ.1125 பொது சேவை மையங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் செலுத்தி பயிர் காப்பீடு பெறலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை அலுவலர் களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT