Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், தொலைபேசி வழியாக நேற்று நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரிலும் மனு அளித்தனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் தலைமையிலான விவசாயிகள் கூறும்போது, "ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தால் பலன் பெறும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளாகிய நாங்கள், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கிய ரூ.2500-ஐ, ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திரும்ப அளிக்கிறோம். அரசின் சார்பில் அதனை பெற்றுக்கொண்டு, திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியு றுத்தி, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பாசனத்துக்கு உட்பட்ட நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. நீர் வரத்து இல்லாததால் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. ஆனைமலையாறு - நல்லாறுதிட்டம் விவசாயிகளை வாழவைக் கக் கூடியது.
இதுதொடர்பாக ஆட்சியரிடம் பேசிவிட்டு கூறுகிறோம் என்று அலுவலகப் பணியாளர்கள் தெரிவித்தனர்" என்றனர்.
சேவல் சண்டை
தமிழ் தேசியக் கட்சியினர் அளித்த மனுவில், "தமிழர் திருநாளான தைப் பொங்கல் நாளில் கொங்கு மண்டலத்தில் நடைபெறும்தமிழர்களின் பாரம் பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு அனுமதிஅளிக்க வேண்டும். சேவல்சண்டை விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்" என்றனர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த சேவல்களையும் ஆட்சியர் அலுவலகம் முன்பு பறக்கவிட்டு ஆதரவு திரட்டினர்.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
காங்கயம் அருகே மறவபாளை யம் கிராம மக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக அறிகிறோம். பொதுமக்களாகிய எங்களுக்கு எந்தவித தகவலும் இல்லை. எங்கள் கிராமத்தில் கல்குவாரி மீண்டும் அமைந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும்.கல்குவாரிகளால் வெளியேற்றப் படும் புகை, தூசியால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகி உள்ளோம்.
கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக வெடிமருந்து வைத்து உடைப்பதனால். ஒலி மாசு பிரச்சினைகள் மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பலருக்கும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளன. ஏற்கெனவே இயங்கும் இரண்டு குவாரிகளை தடை செய்து, எங்கள் பகுதியில் எந்தவொரு குவாரி திட்டத்துக்கான அனுமதியையும் வழங்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT