Published : 05 Jan 2021 08:23 AM
Last Updated : 05 Jan 2021 08:23 AM

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில் 11 மிமீ மழை பதிவானது. இதேபோல், ராயக்கோட்டை 10, நெடுங்கல் 7, ஓசூர் 7, பெனுகொண்டாபுரம் 5.50, தளி 5, கிருஷ்ணகிரி 4.20, பாரூர் 3.20 , போச்சம்பள்ளி 3.20, சூளகிரி 2, ஊத்தங்கரை 1 மிமீ மழை பதிவானது.

தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x