Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM

மங்கலம் கால்நடை மருந்தகத்தில் தரமில்லாத சிகிச்சை வழங்குவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

திருப்பூர், கோவை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் கால்நடைகளில் ‘லம்பி ஸ்கின் டிசீஸ்’ எனும் பெரியம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.

நோய் பாதித்த கால்நடை களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உடல் முழுவதும் வீக்கமும், கட்டிகள் தோன்றி, அவற்றில் சீழ் வெளியேறுவதால் மாடுகள் சோர்வடைவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உடல் உபாதையால் அவதியுறும் மாடுகளை, கால்நடை மருத்துவமனைகளுக்கு அழைத்துச்சென்றால், அங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக திருப்பூர் அருகே மங்கலம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

மங்கலத்தில் உள்ள கால்நடை மருந்தகத்துக்கு ஒரு மருத்துவர் மட்டுமே வருகிறார்.

இவரும் உரிய நேரங்களில் இருப்பதில்லை. கால்நடை ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் என யாரும் இல்லாததால், கால்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இங்குள்ள கால்நடைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி பழுதடைந்துள்ளதால், கால்நடைகள் தண்ணீர் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

சினை ஊசி செலுத்துவதற்கு ஊரில் இருக்கும் சிலரே பயிற்சி எடுத்துக்கொண்டு, அவர்களாகவே கால்நடைகளுக்கு போட்டுக்கொள்கிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x