Published : 04 Jan 2021 03:20 AM
Last Updated : 04 Jan 2021 03:20 AM
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே பிராமணப்பட்டி கிராமத்துக்குரிய மயானம் விளை நிலப்பகுதியில் அமைந்துள்ளது. மயானத்துக்குச் சென்று வந்த பாதையை தனியார் ஒருவர் தனக்குச் சொந்தமானது எனக்கூறி முள்வேலி அமைத்தார். மேலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஆறுமுகம் என்பவர் மாரடைப்பால் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஆனால், மயானப்பாதையை அடைத்தவர்கள் பாதை விட மறுத்துவிட்டனர். இதையடுத்து இறந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரிடமும் கோட்டாட்சியர் சுரேந்திரன், டிஎஸ்பி பொன்ரகு, வட்டாட்சியர் ஜெயலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தினர். தீர்வு எட்டப்படாத நிலையில் ஆத்திரமடைந்த இறந்தவரின் உறவினர்கள், பாதையில் இருந்த கம்பி வேலிகளை உடைத்துவிட்டு பிரேதத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.
கோட்டாட்சியர் கூறுகையில், ‘நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT