Published : 03 Jan 2021 03:23 AM
Last Updated : 03 Jan 2021 03:23 AM
தமிழக முதல்வர் பழனிசாமி கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று (ஜன.3) தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நாளை (4-ம் தேதி) நடைபெறுவதால், முதல்வரின் நாளைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வில்லிச்சேரியில் இன்று (ஜன.3) காலை 8.30 மணிக்கு பிரச்சாரத்தை முதல்வர் தொடங்குகிறார். அங்கு, பருத்தி உற்பத்தியாளர்களுடன் 9 மணிக்கு கலந்துரையாடல், 9.15 மணிக்கு கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 10.15 மணிக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல், 11 மணிக்கு கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பகல் 12 மணிக்கு எட்டயபுரத்தில் நெசவாளர்களுடன் கலந்துரையாடல், விளாத்திகுளத்தில் பகல் 1 மணிக்கு மிளகாய் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடல் செய்கிறார். மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
நாளைய நிகழ்ச்சிகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT