Published : 02 Jan 2021 03:25 AM
Last Updated : 02 Jan 2021 03:25 AM
கடலூர் மாவட்ட எஸ்பி அபிநவ் மாவட்ட எஸ்பி அலு வலகத்தி்ல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் கடந் தாண்டு 130 பேர் குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்யப்பட்டுள் ளனர். இதில் 77 பேர் சட்டம்,ஒழுங்கு பிரிவிலும், குற்றவழக் கில் 15 பேரும், சாராய வழக்கில் 29பேரும் கைது செய்யப்பட்டுள்ள னர்.
கடந்தாண்டு சாலை விபத்து தொடர்பாக 2,602 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாலைவிபத்துகளில் 302 பேர் உயிரிழந் துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு சாலை விபத்து தொடர்பாக 2,816 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சாலை விபத்துகளில் 423 பேர் உயிரிழந்தனர். 2019-ம் ஆண்டை விட கடந்தாண்டு விபத்துகள் குறைந்துள்ளது.
கடந்தாண்டு வாகனங்கள் திருட்டு வழக்குகளில் 15 ஆயிரத்து 959 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்சோ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கடந் தாண்டு 8 வழக்குகளுக்கு தீர்ப்புஅளிக்கப்பட்டுள்ளன. அதில் விருத் தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒரே ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்தாண்டு மொத்தமாக 8 லட்சத்து 82 ஆயிரத்து 882 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக ரூ. 2 கோடியே 41 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT