Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

சேலம்

டெல்டா மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை குறைந்ததை அடுத்து, அங்கு பாசனத்துக்கான நீர் தேவை அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், டெல்டா மாவட்டத்தில் மழை பெய்ததால், பாசனத்துக்கு நீர் தேவை குறைந்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 400 கனஅடியாக நீடிக்கிறது. நீர்வரத்து நேற்று 877 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம் 105.42 அடியாகவும், நீர் இருப்பு 72.42 டிஎம்சி-யாகவும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x