Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM
ராமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரங்கியம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று காலை காலிக்குடங்களுடன் ராமநத்தம் - திட்டக்குடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்த ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும்போலீஸார், ஊராட்சி தலைவர்செல்லமுத்து ஆகியோர் சம்பவஇடத்துக்கு சென்று பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, குடிநீர் பைப்லைனில் ஏற்பட்ட பிரச்சினைகண்டறியப்பட்டு, நேற்று முன்தினம் இரவு சரிசெய்யப்பட்டது. மேல்நிலை தொட்டியில் தண்ணீர்ஏற்றாததால், குடிநீர் வழங்க வில்லை. தொட்டியில் குடிநீ்ர் ஏற்றப்பட்டு விநியோகம் செய்யப்பட் டது. இதனை தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT