Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM
திராவிட இயக்கங்களை அழிக்கும் முயற்சி என எங்கள் கூட்டணியில் இருப்பவர் களைக் கூறவில்லை என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி யில் அவர் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நீண்ட காலமாக திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற போராட்டம் நடந்து வருகிறது.
திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் அறிஞர் அண்ணா. இதுவரை அரசியலுக்கு வராதவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நாட்டை காப்பாற்றுகி றேன் என்று வருகிறார்கள், ஜெயலலிதா இருந்தபோது அமைதியாக இருந்தவர்கள் தற்போது வருவது, எவ்வளவு ஆதங்கத்தில் இருந்தார்கள் என்பதைத் தான் காட்டுகிறது.
நீண்ட காலமாக இந்த திராவிட இயக்கத்தை எதிர்த்துப் போராடிய கூட்டம் தற்போது ஒரு வலுவான அமைப்பாக மாறியதால் அமைதியான சூழல் மாறி மீண்டும் வாய்ப்பு கிடைக்கிறதா என ஊடகங்கள் மூலமாக பேசி வருகின்றனர்.
திராவிட இயக்கங்களை அழிக்க முயற்சி செய்பவர்கள் என எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களைப் பற்றி நாங்கள் கூறவில்லை. எங்கள் கூட்டணியில் இருப்பவர்களை விமர்சிப்பதற்கு நாங்கள் அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் இல்லை. எவ்வளவு முயற்சி செய்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது. எங்க ளுடன் கூட்டணியில் உள்ள பாஜகவையோ மற்ற கட்சிகளையோ விமர்சனம் செய்யவில்லை.
இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT