Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

விருதுநகர் ஆட்சியரின் வாகனம் உள்ளிட்டஅனைத்து அரசு வாகனங்களிலும் பம்பர் அகற்றம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களின் வாகனங்களில் இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டன.விருதுநகரில் மாவட்ட ஆட்சியரின் வாகனத்திலிருந்து அகற்றப்படும் பம்பர்.

வாகனங்களின் முகப்பில் பம்பர் இருந்தால், விபத்து நேரும்போது காற்றுப் பைகள் திறப்பதில்லை. இதனால் காரின் முன்பகுதியில் அமர்ந்திருப்போர் படுகாயமடைந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க வாகனங்களின் முகப்பில் பம்பர் வைக்கக் கூடாது. பம்பர் பொருத்தப்பட்டிருந்தால், அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களின் வாகனங்களிலும் இருந்த பம்பர்கள் நேற்று அகற்றப்பட்டன. மேலும் மாவட்டத்தில் பம்பரை அகற்றாமல் விதிமுறையை மீறி வாகனம் ஓட்டியதாக இதுவரை 56 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x