Published : 29 Dec 2020 03:16 AM
Last Updated : 29 Dec 2020 03:16 AM

126 மகளிர் குழுக்களுக்கு ரூ.1.22 கோடி கடன் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தகவல்

திருவாரூர்

126 மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு ரூ.1.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்துக்குட்பட்ட கொட்டையூர், ஆலங்குடி, மேலஅமராவதி, சித்தன்வாழூர் ஆகிய பகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நேரடி வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி அமைச்சர் பேசியது:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்துக்குட்பட்ட கொட்டையூர், நார்த்தாங்குடி, பாப்பாகுடி, அரவூர், மாணிக்கமங்கலம், ஆலங்குடி, பூந்தோட்டம், தென்குவளவேலி, பூனாயிருப்பு, சாரநத்தம், திருவோணமங்கலம், பாடகச்சேரி, மாத்தூர், பெருங்குடி, புளியக்குடி, சித்தன்வாழுர், கண்டியூர், கீழவிடையல், மேலவிடையல், தொழுவூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 126 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.22 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

திருவாரூர் கோட்டாட்சியர் பாலசந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் லேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x