Published : 25 Dec 2020 03:16 AM
Last Updated : 25 Dec 2020 03:16 AM
திருப்பூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சுத்திகரிப்பு மையப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் (வடக்கு) சரவணக்குமார், தெற்கு பொறியாளர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனியார் நிறுவன பொது மேலாளர் சம்பத்குமார் பேசினார்.சாய ஆலைகளில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யகுளோரின் பயன்படுத்தப்படுகிறது.
குளோரின் சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டால்,கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படும்.அப்படி ஏற்படின், அவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல பாதுகாப்பு உடை மற்றும் முகக் கவசம் உள்ளிட்டவை அணியவும் அறிவுறுத்தப்பட்டது. குளோரின் கசிவை தடுப்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT