Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதைக் கண்டித்து விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், சிவ கங்கை, தேனி ஆகிய இடங்களில் திமுக மகளிர் அணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்டத் தலைவர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்டத் தலைவர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் எம்எல்ஏ சீனிவாசன், வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி, தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, நகர செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான மகளிர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநில மகளிர் அணி துணைத் தலைவரும், முன்னாள் எம்பியுமான எம்எஸ்கே. பவானி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கற்பகம், மகளிரணி தலைவர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திமுக மாநில தீர்மானக்குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன், விவசாய அணி துணைச் செயலர் ஆர்.முருகவேல், வர்த்தக அணி நிர்வாகி பெருநாழி போஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பிரபாகரன் (ராம நாதபுரம்), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), முகமது முக்தார் (திருவாடானை), ராதிகா பிரபு (ஆர்.எஸ்.மங்களம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் நாகல் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் ரேவதி, உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேனி
சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், மகளிரணி துணை அமைப்பாளர்கள் மணிமேகலை, தமயந்தி, சீதா லட்சுமி, ரம்யா, டயானா, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரத்தினசபாபதி, நகர பொறுப்பாளர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சிவகங்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT