Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

சுண்ணாம்புச்சத்து நிறைந்த நீரை குடிப்பதால் சிறுநீரகம் பாதிப்பு சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மக்கள் ஆட்சியரிடம் புகார்

சுண்ணாம்புச்சத்து நிறைந்த நிலத்தடி நீரை குடிப்பதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மக்கள். படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

‘‘சுண்ணாம்புச்சத்து நிறைந்த நிலத்தடி நீரைக் குடிப்பதால் சிறுநீரகநோயால் அவதிப்படுவதாக தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக நேற்றுவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நடைபெற்றது. இருப்பினும் பல்வேறு கிராம மக்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆட்சியர்அலுவலகத்துக்கு திரண்டு வந்துமனு அளித்தனர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவஞானபுரம் கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு காலி குடங்களுடன் வந்து அளித்த மனு விவரம்:

‘சேர்வைக்காரன்மடம் ஊராட் சிக்கு உட்பட்ட சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம், காமராஜ் நகர், சேர்வைக்காரன்மடம், ஆழ்வார் நகர், செந்தியம்பலம் ஆகிய கிராமங்களுக்கு குளம் மற்றும் தேரி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலத்தடி நீரில் சுண்ணாம்புச்சத்து அதிகம் இருப்பதால் எங்கள் பகுதியில் பெரும்பாலான மக்கள் சிறுநீரகம் பாதிப்புமற்றும் வயிற்றுக் கோளாறு போன்றவை ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர். பலர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

எங்கள் ஊராட்சி உள்ளிட்ட 28 கிராம ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எங்கள் ஊராட்சிக்கு மட்டும் இதுவரை தண்ணீர் வழங்கவில்லை. எனவே, ஆட்சியர் நடவடிக்கை எடுத்து தாமிரபரணி தண்ணீர் வழங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.

மழைநீர் பிரச்சினை

தூத்துக்குடி தபால் தந்தி காலனி 13, 14, 15, 16-வது தெருக்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்: ‘எங்கள் பகுதியில் மழை பெய்தால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்கிவிடுகிறது. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகஇந்த பிரச்சினையை சந்தித்து வருகிறோம். இந்த பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண நிரந்தர வடிகால் அமைத்து, அதன் பிறகு சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

தூத்துக்குடி அருகேயுள்ள மேலத்தட்டப்பாறை கிராம மக்கள் ஆட்சியர்அலுவலகத்தில் அளித்த மனு: ‘எங்கள்பகுதியில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதாகவும், அதற்காக மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, தெற்கு சிலுக்கன்பட்டி, அல்லிகுளம், ராமசாமிபுரம், பேரூரணி, உமரிக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 2,200ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் மாசடையும். முக்கிய ஓடைகளை அழிக்கும் நிலை ஏற்படும்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x