Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM

டெல்லியில் நடைபெறும் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி கிராமங்கள்தோறும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பங்கேற்பு

திருச்சி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த விவசாயிகளுக்கு கிராமங்கள்தோறும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில், இதுவரை 30-க்கும் அதிகமானோர் போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழந்த விவசாயி களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்த அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது.

அதன்படி, திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் மேலபாண்டமங்கலம், அரவானூர் ஆகிய இடங்களில் அஞ் சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. போராட்ட ஒருங்கி ணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசூரியன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் த.இந்திரஜித் முன்னிலையில் மிளகுபாறையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப் படங் களுக்கு மலர் தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய கம்யூ னிஸ்ட், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, ஏஐடியுசி, விவ சாயத் தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புக ளின் நிர்வாகிகள் கலந்துகொண்ட னர்.

இதேபோல, மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா தலைமையில் அரவானூரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் உட்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அரியலூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் உலகநாதன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், துணைச் செயலாளர் டி.தண்டபாணி, அனைத்து விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ பத்மாவதி உள்ளிட்டோர், மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.செல்லதுரை தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எஸ்.சி.சோமையா, இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.எஸ்.தனபதி, தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் மற் றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

இதேபோல, மாவட்டத்தில் அறந் தாங்கி, ஆலங்குடி, கறம்பக்குடி, பொன்னமராவதி உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சிக்கு, விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பா ளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். மேலும், பேரா வூரணி, சேதுபாவாசத்திரம், திருவோணம், பட்டுக்கோட்டை, பூதலூர், பாபநாசம், திருவையாறு அம்மாபேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களிலும் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக விவசாய சங்க மாவட்டச் செயலாளர் தம்புசாமி, முன்னாள் எம்எல்ஏ வை.சிவபுண்ணியம் மற்றும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்று, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, திருத்துறைப்பூண்டியிலும் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் லைட்ஹவுஸ் பெரியார் சிலை அருகில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் டெல்லி போராட் டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x