Published : 21 Dec 2020 03:16 AM
Last Updated : 21 Dec 2020 03:16 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்/தி.மலை
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 669-ஆக அதிகரித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 372- ஆக அதிகரித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அம்மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 375-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 19,009-ஆக உயர்ந்தது. கரோனா தொற்றில் இருந்து 18,634 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 280 பேர் உயிரிழந்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT