Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
ராணிப்பேட்டை மாவட்டத் தில் கரோனா விதிகளை பின்பற்றி குடியரசு தின விழாவை சிறப்பாக கொண் டாட முடிவு செய்யப்பட்டுள் ளது.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச் சந்திரன், சார் ஆட்சியர் இளம்பகவத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இளவரசி, ஆட்சி யர் அலுவலக மேலாளர் விஜயகுமார், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ராணிப் பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத் தில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை கரோனா விதிகளை முறை யாக பின்பற்றி நடத்துவது, சுதந்திர போராட்ட தியாகி களை அவர்களின் வீடுகளுக்கே சென்று உரிய மரியாதை செலுத்துவது எனமுடிவு செய்யப்பட்டது.
குடியரசு தின விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட உள்ள நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் பட்டியலை விரைவில் சமர்ப்பிக்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து,சட்டப்பேரவை தேர்தலுக் கான வாக்குச்சாவடி பணி யில் ஈடுபட உள்ள அரசுத் துறை அலுவலர்களின் விவரம் கோரும் கூட்டம் நடை பெற்றது. இதில், வாக்குச் சாவடி பணியில் ஈடுபட உள்ள அரசுத் துறை அலுவலர் களின் பட்டியலை 21-ம் தேதிக்குள் (நாளை) சமர்ப் பிக்க வேண்டும் என அந்தந்த துறைகளின் அதிகாரி களுக்கு ஆட்சியர் கிளாட்ஸ் டன் புஷ்பராஜ் உத்தர விட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT