Published : 20 Dec 2020 03:15 AM
Last Updated : 20 Dec 2020 03:15 AM
வேலூர் மாவட்டத்தில் கிறிஸ்டியான் பேட்டை, சேர்க்காட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர் உட்பட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில எல்லைகளில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் கடந்த 12-ம் தேதி அதிகாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையோரத்தில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் ஆய்வு நடைபெற்றன.
இதில், சேர்க்காட்டில் நடை பெற்ற சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா வின் பர்ஸில் இருந்து ரூ.4,725, மேஜை டிராயரில் இருந்து ரூ.22,850 கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், சோதனைச் சாவடி யில் வாகனங்களை நிறுத்தும் பணி யில் 2 தனி நபர்கள் ஈடுபட்டிருந் தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பொம்மசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தினகரன் என்ற ஷியாம் (40) என்றும், சேர்க்காடு பகுதியைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலைப் பணியாளர் லோலன்தாஸ் (50) என்பது தெரிய வந்தது.
இதில், லோலன்தாஸ் சாலைப் பணியாளராக இருந்தாலும் அவ் வப்போது வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் விதிகளை மீறி பணியாற்றி வந்துள் ளார். தினகரனிடம் இருந்து ரூ.10 ஆயிரமும், லோலன்தாஸிடம் இருந்து 1,300 ரூபாய் என பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.38 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயமேகலா, தினகரன், லோலன் தாஸ் ஆகியோர் மீது வாகன ஓட்டி களிடம் இருந்து லஞ்சப் பணம் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதேபோல், கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் நடைபெற்ற சோதனையில் மோட் டார் வாகன ஆய்வாளர் ராம்கண் ணன் பாக்கெட்டில் இருந்து ரூ.3 ஆயிரமும், அவரது மேஜை டிராயரில் இருந்து கணக்கில் வராத ரூ.88 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு விதிகளை மீறி பணியாற்றி வந்த தனிநபர் பாபு என்பவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.3 ஆயிரம் என மொத்தம் 94 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம் கண்ணன், பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த திடீர் சோதனையில் 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள் ளனர். இவர்கள், 5 பேரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக விரைவில் அழைக்கப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறையி னர் தரப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT