Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM

அம்மா மினி கிளினிக்கால்7 கோடி பேர் பயன்பெறுவார்கள் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து குத்து விளக்கேற்றிய அமைச்சர் கே.சி.வீரமணி. அருகில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தமிழகத்தில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் மூலம் ஆண்டுக்கு 7 கோடி பேர் பயன் பெறுவார்கள் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் சத்துவாச்சாரியில் முதல மைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிதாக 106 இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட உள்ளன. இதன் முதற்கட்டமாக 10 இடங் களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத் தில் தொடங்கப்படும் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் மூலம் மாதத்துக்கு ஏறத்தாழ 60 லட்சம் பேரும், ஆண்டுக்கு 7 கோடி பேரும் பயன்பெறுவார்கள். குறிப்பாக, கிராமத்தில் இருக்கும் விவசாய கூலி தொழிலாளிகள், ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.

திருப்பத்தூரில் மினி கிளினிக்தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக எம்எல்ஏவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் ஏதோ ஆட்சி நடத்துவதுபோல் நாகரீகமற்ற முறையில் பட்டாசு வெடித்து நிகழ்ச்சியின் கடைசியில் வந்து தக ராறில் ஈடுபட்டது கண்டிக்கக் தக்கது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x