ஞாயிறு, டிசம்பர் 29 2024
Last Updated : 18 Dec, 2020 03:17 AM
Published : 18 Dec 2020 03:17 AM Last Updated : 18 Dec 2020 03:17 AM
போடி: எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தேனி மாவட்டம் போடி கட்டபொம்மன் சிலை அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாலுகா செயலாளர் எஸ்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் கண்டன உரையாற்றினார். ஒரு மாதத்தில் ரூ.100 வரை விலையை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து கண்டன முழக்கமிட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பாண்டியன், எஸ்.மீனா தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.போஸ், கே.செல்வராஜ், ஆர்.தங்கப்பாண்டி, எம்.செல்லப்பாண்டி, நாகராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT