Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங் களில் நடப்பு பருவத்தில் 500 மெட்ரிக் டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன் அருள் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "விவ சாயிகளின் விளைப்பொருட் களுக்கு உரிய விலை கிடைக்க வும், அவர்களின் வருவாயை பெருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து துவரை நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2020-21-ம் ஆண்டும் துவரை கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள் ளது. திருப்பத்தூர் மாவட்டத் தில் திருப்பத்தூர் மற்றும் வாணி யம்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் துவரை கொள்முதல் செய்யப்படவுள்ளன.
திருப்பத்தூர் மற்றும் வாணி யம்பாடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடப்பு பருவத் தில் தலா 250 மெட்ரிக் டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பர் 15-ம் தேதி (இன்று) தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதி வரை செயல்படும்.
அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயி 2,500 கிலோ துவரை கொண்டு வரலாம். ஒரு கிலோ துவரை ரூ.60-க்கு கொள்முதல் செய்யப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்துடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
விளைப் பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இது தொடர்பாக கூடுதல் விவரம் தேவைப்படுவோர் திருப்பத்தூர் வேளாண் துணை இயக்குநர் (வணிகம்), திருப்பத்தூர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைச்செயலாளர் அலுவலகம், வேலூர் விற்பனைக்குழு, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அலுவலகம், திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அலுவலகம், வாணியம்பாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப் பாளர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் லாபகரமான விலை கிடைக்க இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT