Published : 13 Dec 2020 03:16 AM
Last Updated : 13 Dec 2020 03:16 AM
கடலூர் மாவட்டம் சிதம்பரம்ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட மேல்அனுவம்பட்டு, சி.முட்லூர் பகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் குறித்து பெறப்பட்ட படிவங் களில் உள்ள விவரங்களை விண் ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று பெயர், முகவரி போன் றவை சரியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார்.
வரும் 15-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வேலைநாட்களில் அனைத்து வாக்காளர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் படிவங் களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும் இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பான தங்களது சந்தேகங்களுக்கு 04142- 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பினை பொது மக்கள் நன்கு பயன்படுத்தி பயனடையுமாறு ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் 15-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக மற்ற வேலைநாட்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT