Published : 13 Dec 2020 03:17 AM
Last Updated : 13 Dec 2020 03:17 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டு இந்த ஆண்டேநடைமுறைப்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி தமிழகம் முழுவதும் அரசு மற்றும் சுய நிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள 313 மருத்துவ படிப்பு(எம்பிபிஎஸ்) அரசு ஒதுக்கீட்டுஇடங்கள் மற்றும் 92 பல் மருத்துவ படிப்பு (பிடிஎஸ்) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆயிஷா சைனீராவுக்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சவலாப்பேரி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிளாவுக்கு சென்னை அரசு பல்மருத்துவக் கல்லூரியிலும், வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சுதாவுக்கு தேனி மருத்துவக் கல்லூரியிலும், வைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வேல்மதிக்கு திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியிலும் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது.
இம்மாணவிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT