Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM
உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ.1.52 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஆட்சியர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரிமாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட நமிலேரி ஊராட்சி உனிசெட்டி கிராமத்தில், தனியா ர் நிறுவனத்தின் உதவியுடன் ரூ.1.52 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் என்.பி.தர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறியதாவது:
உனிசெட்டி கிராமத்தில் ஏற்கெனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடைகோடி மலைக்கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார நிலையம் குறைவான பரப்பளவில் அமைந்துள்ளதால், கூடுதல் கட்டிடம் சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.52 கோடி மதிப்பில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது.
இங்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெறலாம். மாதத்துக்கு 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஆட்சியர் கூறினார். இவ்விழாவில்புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மூலம் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மருத்துவர் கோவிந்தனிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT