Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரியில் ரூ. 1.10 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்பி., தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்பி., தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட் பட்ட பகுதியில் ரூ.1.10 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி, திம்மராய கவுண்டர் தெருவில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்பி., தலைமை வகித்து, தார் சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், நகர செயலாளர் கேசவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x