Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

மதுரை வைகை ஆற்றில் மூழ்கி இரு சகோதரிகள் உயிரிழப்பு

மதுரை: மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயில் அருகே வசிப்பவர் முருகன். இவர் டவுன் ஹால் ரோட்டில் உள்ள புரோட்டா கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். மூத்த மகள் சுதி(13), இரண்டாவது மகள் சுஜி(12). இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் பென்சில், பேனா வாங்கித் தருமாறு தாயிடம் நேற்று முன்தினம் கேட்டுள்ளனர். அவர், வேலை முடித்து அப்பா வந்த பிறகு வாங்கலாம் எனக் கூறினார். தொடர்ந்து வற்புறுத்திய தால் தாயார் திட்டி உள்ளார். இதையடுத்து சுதியும், சுஜியும் வீட்டைவிட்டு வெளியே சென்றனர்

இந்நிலையில் வைகை ஆற்றில் மதுரை எல்ஐசி பாலம் முன்பாக சிறிது தூரத்தில் நேற்று காலை இரு சிறுமிகளின் உடல்கள் கரை ஒதுங்கின. இதை அறிந்த போலீஸார் உடல்களை மீட்டு விசாரித்தனர். இவர்கள் முருகனின் மகள்கள் என அடையாளம் தெரிந்தது. தாய் திட்டியதால் விரக்தியில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என கரிமேடு, செல்லூர் போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த இரு சிறுமிகளும் ஏற்கெனவே ஒருமுறை மாயமாகி, தோழி ஒருவரின் வீட்டில் இருந்து மீட்டு வரப்பட்டனர். இருப்பினும் சுதி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததாகவும், அவரது பேச்சைக் கேட்டு சுஜி தண்ணீருக்குள் குதித்திருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x