Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM
வேலூரில் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து தப்பிய 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கு அருகே அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள், பாலியல் வழக்குகளில் கைதான பெண்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இவர்களில் 18 முதல் 21 வய துள்ள 5 பேர் நேற்று அதிகாலை தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் துறையினர் அவர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT