Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

சனிப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம்

மதுரை

மதுரை பசுமலை மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சனி பகவான் வரும் 27-ம் தேதி காலை 5.22 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். மதுரை பிரம்மஸ்தான ஆலயத்தில் டிச.27-ம் காலை சிறப்பு ஹோமம் நடைபெற உள்ளது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஹோமத்தில் பக்தர்கள் நேரடியாகக் கலந்து கொள்ள அனுமதியில்லை. எனவே, ஹோமம் முறைப்படி செய்யப்பட்டு பிரசாதம் தபால் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.150. விருப்பமுள்ளோர் டிச.25-ம் தேதிக்குள் மடத்தின் அலுவலகத்தில் கட்டணத்தைச் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x