Published : 06 Dec 2020 03:16 AM
Last Updated : 06 Dec 2020 03:16 AM

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளுக்காக மற்றொரு சுதந்திரப் போராட்டம் நடக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி கருத்து

கடலூர்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடுங்குளிரையும் பொருட் படுத்தாமல், தங்களது உரிமைக்காக லட்சக்கணக்கான விசாயிகள் டெல்லியை முற்றுகை யிட்டுள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். விவசாயிகள் நடத்தும் இந்தப் போராட்டம், உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் வந்தால் தற்கொலை மேலும் அதிகரிக்கும். இல்லையென்றால் விவசாயிகள் தங்களது நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து விட்டு, அந்த நிலங்களில் அவர்களே கூலி வேலை செய்யும் அவலம் ஏற்படும்.

ஆயிரக்கணக்கில் திரண்டாலும் விவசாயிகள் கட்டுப்பாட்டுடன் அறப்போராட்டத்தை நடத்து கின்றனர்.

இதே அறத்துடன் விவசாயி களின் கோரிக்கைகளை ஏற்று, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் இன்னொரு சுதந்திர போராட்டம் நடக்கும் என மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x