Published : 05 Dec 2020 03:16 AM
Last Updated : 05 Dec 2020 03:16 AM

அதிமுக நிர்வாகி மருத்துவ செலவுக்கு அமைச்சர் நிதி உதவி

சாத்தூர்விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அண்ணா நகர் 2-வது வார்டில் வசிப்பவர் மகேந்திரன்(47). அப்பகுதி அதிமுக வார்டு செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ செலவுக்குப் பணமில்லாமல் மகேந்திரன் சிரமப்பட்டு வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, மகேந்திரனின் அறுவை சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x