Published : 05 Dec 2020 03:17 AM
Last Updated : 05 Dec 2020 03:17 AM
சபரிமலை கோயிலுக்குச் செல்ல ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாமல்தமிழகத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் திண்டாடி வருகின்றனர். ஆன்லைன்டிக்கெட் முன்பதிவு வசதியை மீண்டும் ஒரு முறை வழங்க கேரள அரசு ஏற்பாடுசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்றசபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில்மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குகால பூஜைக்காகக் கடந்த நவம்பர்மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. நவம்பர் 17-ம் தேதி அதிகாலைமுதல் பக்தர்கள் தரிசனத்துக்குஅனுமதிக்கப்பட்டனர். கரோனாதொற்று பரவல் காரணமாக சபரிமலையில் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
அதன்படி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை முதல் 5 நாட்கள் தினமும்ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறன்று 2 ஆயிரம் பக்தர்களும், மகரவிளக்கு தினத்தன்று 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. தொடங்கிய 2 மணி நேரத்தில் அனைத்து நாட்களுக்குரிய டிக்கெட் முன்பதிவு முடிவடைந்தது.
இந்த நிலையில் சபரிமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசிடம் வலியுறுத்தியது. இதையடுத்து தினமும் கூடுதலாக 1,000 பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுஅனுமதி அளித்தது. அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள5 நாட்கள் தினமும் 2,000 பக்தர்களும், சனி மற்றும் ஞாயிறன்று3,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என, கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்தார்.
கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஆன்லைன் முன்பதிவு டிசம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது. இப்போதும் பெரும்பாலான பக்தர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை.
சபரிமலை கோயிலுக்கு ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து தான் அதிகம் பக்தர்கள் செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு இவர்களில் பெரும்பாலானோருக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால், மாலை அணிந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். பலர் உள்ளூர்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் வழிபட முடிவு செய்துள்ளனர்.
சர்வர் திணறியதால் ஏமாற்றம்
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஐயப்ப பக்தரும் பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணி நிர்வாகியுமான எஸ்.சிவராமன் கூறும் போது, ‘‘ 22 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறேன். இந்த ஆண்டு எனக்கு நவம்பர் 1-ம் தேதி மிகவும் சிரமப்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டேன். ஆனால், எனது குழுவைச் சேர்ந்தவர்களுக்கு முன்பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 2-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது. அப்போது தொடங்கி மறுநாள் அதிகாலை 2 மணி வரை முயற்சி செய்தும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. சர்வர் மிகவும் மெதுவாக செயல்பட்டதே இதற்கு காரணம். அதன் பிறகு முயற்சி செய்தால் அனைத்து டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக இணையதளத்தில் தகவல் வருகிறது.
இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மாலை அணிந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாததால் கடும் மன வேதனை அடைந்துள்ளனர். எனவே, தமிழக பக்தர்களின் வசதிக் காக இணையதள சர்வரை சரி செய்து, ஆன்லைன் முன்பதிவு வசதியை மீண்டும் ஒருமுறை அனுமதிக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT