Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட பணிகள் தொடர்பான சமூக தணிக்கை உயர்மட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், உயர்மட்டக் குழுவால், ஊராட்சி ஒன்றியங்களில் நிலுவையில் உள்ள 204 சமூக தணிக்கை பத்திகள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சமூக தணிக்கை பத்திகளில், நிதி இழப்பு தொடர்புடைய பத்திகளுக்கு காரணமான ஊராட்சி செயலர்கள் மீது குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்க வேண்டும். பணித்தளப்பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இக்கூட் டத்தில் கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா, உதவி இயக்குநர் ஜெயசங்கர், உதவி திட்ட அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT