Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

கிருஷ்ணகிரி அணைக்கு 426 கனஅடி நீர்வரத்து

கிருஷ்ணகிரி/தருமபுரி

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 426 கனஅடியாக உள்ளது.

புரெவி புயலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிருஷ்ணகிரி, பாரூர், பெனு கொண்டாபுரம், ஊத்தங்கரை பகுதிகளில் நேற்று மழை பொழிவு காணப்பட்டது. நேற்று காலை சாரல் மழையால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். ஊத்தங்கரையில் 3.30 மிமீ, கிருஷ்ணகிரி 1, பெனுகொண்டாபுரத்தில் 2.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கிருஷ்ணகிரி அணையைப் பொறுத்தவரை அணைக்கு நீர்வரத்து 426 கனஅடியாக இருந்தது. அணை யின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 50.10 அடிக்கு தண்ணீர் உள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் ஆற்றிலும், பாசனக் கால்வாய்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே சாரல் மழை பெய்தது. தருமபுரி, அரூர், நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிவு காணப்பட்டது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x