Published : 04 Dec 2020 03:17 AM
Last Updated : 04 Dec 2020 03:17 AM

சென்னை-திருச்செந்தூருக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது

மதுரை

சென்னை-திருச்செந்தூர் இடையே மற்றும் நாகர்கோவில், கொல்லம் வழியாக மதுரை-புனலூர் இடையே தினசரி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை-திருச்செந்தூர் சிறப்பு ரயில் இன்றுமுதல் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூர் வந்து சேரும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் டிச.5 முதல் திருச்செந்தூரிலிருந்து மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, ஆடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செய்துங்கநல்லூர், வைகுண்டம், நாசரேத்,குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் பூதலூர் ரயில் நிலையத்திலும், சென்னை எக்ஸ்பிரஸ் சாத்தூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, ஒருகுளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிபெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

மதுரை-புனலூர் விரைவு சிறப்புரயில் இன்று முதல் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் புனலூர்-மதுரை விரைவு சிறப்பு ரயில் புனலூரில் இருந்து டிச.5 முதல் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை6.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.இந்த ரயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, நாகர்கோயில், இரணியல், குளித்துறை, பாரசாலா, நெய்யாற்றின் கரை, திருவனந்தபுரம் சென்ட்ரல், திருவனந்தபுரம் பேட்டை, கொச்சுவேலி, கழக்குட்டம், கணியபுரம், முருக்கம்புழா, சிரயங்கில், வர்க்கலா, எடவை, பரவூர், மய்யநாடு, கொல்லம், கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா, அவனிஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். புனலூர் சிறப்பு ரயில் வள்ளியூர் ரயில் நிலையத்திலும், மதுரை சிறப்பு ரயில் தனுவச்சபுரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 காப்பாளர் மற்றும் சரக்குபெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் எனமதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x