Last Updated : 02 Dec, 2020 03:16 AM
Published : 02 Dec 2020 03:16 AM
Last Updated : 02 Dec 2020 03:16 AM
விருதுநகரில் சாலைப் பாதுகாப்புவிழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணிவிருதுநகரில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற போலீஸார்.
சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, விருதுநகரில் காவல்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி, புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை தொடங்கியது. துணைக் காவல் கண்காணிப்பாளர் அருணாச்சலம் இப்பேரணியைத் தொடங்கி வைத்தார். இப்பேரணி எம்ஜிஆர் சிலை ரவுண்டானா, பாத்திமா நகர், மாரியம்மன் கோயில், பழைய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, சத்திரரெட்டியபட்டி வரை சென்று மீண்டும் அங்கிருந்து மதுரை ரோடு, அரசு மருத்துவமனை, பாண்டியன் நகர், அல்லம்பட்டி முக்கு ரோடு வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தை அடைந்தது.
லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...
Follow
FOLLOW US
WRITE A COMMENT