Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

டெல்லியில் ஜனவரி 26-ல் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவர்கள் தேர்வு

திருப்பூர்

புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அரசுக் கல்லூரி மாணவி மற்றும் ஒரு மாணவர் திருப்பூரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, பாரதியார் பல்கலைக்கழத்துக்கு உட்பட்ட 111 கல்லூரியை சேர்ந்த, 26,500 மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தில் பணியாற்றுகின்றனர். இதில் டெல்லி குடியரசு தின அணிவகுப்புக்காக 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு -2-ஐ சேர்ந்தமாணவி கோகிலவாணி, மாணவர் பாலமுருகன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். 54 ஆண்டுகள் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்வது இதுவே முதல்முறை என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாணவர்களும், திருச்சி தேசியக் கல்லூரியில் வரும் 6-ம் தேதி வரை, தென் இந்திய குடியரசுதின அணிவகுப்பு பயிற்சி முகாமில் பங்கேற்கின்றனர். இருவரையும், சிக்கண்ணா கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாணவ செயலர் சந்தீப், காமராஜ், சந்தோஷ் மற்றும் பேராசிரியர்கள் விநாயகமூர்த்தி, சங்மேஸ்வரன், ராஜாராம் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் வாழ்த்தி, பயிற்சி முகாமுக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.கோகிலவாணிபாலமுருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x