Published : 30 Nov 2020 03:10 AM
Last Updated : 30 Nov 2020 03:10 AM

விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி காய்கறி பயிர்களில் நூற்புழு தாக்கத்தை கட்டுப்படுத்த யோசனை

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வட்டாரம் உகாயனூர் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை விரிவாக்கமையத்தின் உதவி இயக்குநர் பொம்முராஜ் தலைமை வகித்தார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

துணை வேளாண்மை அலுவலர்தியாகராஜன், வேளாண் திட்டங்கள்உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விளக்கினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தபொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிர்பாதுகாப்புத் துறை விஞ்ஞானிபி.ஜி. கவிதா, காய்கறிப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார்.

பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழு வேளாண் அதிகாரிகள் கொண்ட குழு காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி மற்றும் தட்டைப்பயிரில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது தட்டைப்பயிர் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறமாகவும் காட்சி அளித்ததால், மண் மற்றும் நீர் மாதிரிகள்சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. முடிவில் ‘மெலாய் டோகைன் இன்காக்னிடா’ என்று அழைக்கப்படும் வேர் முடிச்சு நூற்புழு அதிக அளவில் இந்தபயிரைத் தாக்கியுள்ளது, தெரிய வந்தது.

இந்த நூற்புழு வேரின் உள்ளே சென்று வேர்முடிச்சு என்றழைக்கப்படும் உருமாறிய வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர் முடிச்சு ஏற்படுவதால், தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்களை உறிஞ்ச முடியாமல் பயிர்கள் மஞ்சள் நிறமாகவும் வாடியும் தோற்றமளிக்கின்றன. பயிர் மகசூல் இறப்பையும் ஏற்படுத்துகிறது.

கோடை உழவு செய்தல், கடைசி உழவின்போது வேப்பம் புண்ணாக்கு இடுதல், பயிர் சுழற்சி முறையை கையாள வேண்டும். ‘மேரி கோல்ட்’ என்றழைக்கப்படும் மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட கேந்தி செடியை ஊடுபயிராக பயிரிட வேண்டும். ‘ஆல்ஃபா டெரத்தைனில் பைதைனில்’ எனப்படும் ரசாயன திரவம் கேந்தி செடியின் வேர்களில் உற்பத்தி யாகிறது. இது நூற்புழுக்களை பெருமளவில் கட்டுப்படுத்துகிறது என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x