Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்

மதுரை

உலக வாசெக்டமி வாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நவம்பர் 30-ம் தேதி கச்சைகட்டி, டி.வாடிப்பட்டி, டிச.1-ம்தேதி திருமங்கலம், செக்கானூரணி, டிச.2-ம் தேதி உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், 3-ம் தேதி சமயநல்லூர், 4-ம் தேதி கள்ளந்திரி ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடைபெறும். அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிச.4-ம் தேதி இம்முகாம் நடக்கும்.

குடும்பநல கருத்தடை செய்து கொள்வோருக்கு ரூ.1,100 வழங்கப்படும். அவர்களை அழைத்து வருவோருக்கு ரூ.200 வழங்கப்படும்.

சிகிச்சைக்குப் பின் மருத்துவ கவனிப்பு இலவசமாக வழங்கப்படும். இந்த சிகிச்சை செய்வதால் ஆண்மைக் குறைவு ஏற்படாது.

மேலும் விவரங்களுக்கு 0452-2641937 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட குடும்ப நலத் துறை துணை இயக்குநர் கே.லதா தொிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x