Published : 28 Nov 2020 03:18 AM
Last Updated : 28 Nov 2020 03:18 AM

தூய்மை பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி

வைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு நத்தம் பகுதியில் உள்ளவளம் மீட்பு பூங்கா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பராமரிப்பு பணி மந்தமாக நடைபெறுவதால், குப்பைகளை வைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் கரைப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. ஆற்றின் கரையோரத்தில் குப்பைகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வைகுண் டம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் தாமிரபரணி கரையோரத்தில் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டன. அப்போது அங்கு வந்த பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா அவதூறாக பேசியதாக வைகுண்டம் பேரூராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்றுவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தூய்மைப்பணி கள் பாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x