Published : 26 Nov 2020 03:18 AM
Last Updated : 26 Nov 2020 03:18 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பை எதிர்கொள்ள எஸ்பி அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் என எஸ்பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "‘நிவர்’ புயல் காரணமாக தமிழகத் தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங் களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள எஸ்பி அலுவலகத்தில் காவல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்புப்பணி களில் 3 டிஎஸ்பிக்கள், 17 காவல் ஆய்வாளர்கள், 31 உதவி ஆய்வா ளர்கள், 220 காவலர்கள், 50 ஆயுதப் படை காவலர்கள், 90 ஊர்க்காவல் படையினர், 160 தன்னார்வலர்கள் என மொத்தம் 571 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.
இது தவிர, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 110 பேர் உட்கோட்ட பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளனர். கனமழை காரணமாக அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர், 4 காவலர்கள் என 11 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
பேரிடர் மீட்பு பயிற்சி முடித்தகாவலர்கள் 3 உட்கோட்டங்களில் டிஎஸ்பி தலைமையில் தனிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு பேரிடர் மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர். நிவர் புயல் பாதிப் பாலும், கனமழையால் பாதிக்கப் படும் இடங்களுக்கு செல்லும் இக்குழுவினர் அங்குள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங் களுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், ஏரிகள், ஆறுகள், குளம், குட்டை மற்றும் நீர்தேக்கங்கள், நீர்நிலைகளை கண்காணிக்க 28 இரு சக்கர வாகன ரோந்து காவலர்கள் 24 மணி நேரமும் ரோந்துப்பணி மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மிகவும் கவன முடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். எந்த இடத்திலும் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு தகவல் தெரி விக்க வேண்டும். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் தொலை பேசி எண்ணான 04179-221104 அல்லது 94429-92526 என்ற எண் ணில் தகவல் தெரிவிக்கலாம்.
நிவர் புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால் தேவையில் லாமல் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண் டும். தாழ்வானப்பகுதிகளில் வசிப் போர், நீர்நிலைகளுக்கு அருகாமை யில் வசிப்போர்கள் தாங்களாக முன்வந்து நிவாரண முகாம்களில் தங்கி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT