Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிவித்திடுக

கடலூர்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி கணினி ஆசிரியர்கள் சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் லால்குடி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட் டத்தலைவர் கடலூர் மோகன்குமார் வரவேற்று பேசினார். தொழிற்கல்வி கணினி அறிவியல் ஆசிரியர்கள் அனைவரையும் முதுகலை ஆசிரியர்களுக்கு இணையானவர்கள் என அறிவிக்க வேண்டும். 50 சதவீத பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு கணக்கில் கொள்ளுதல் வேண்டும். பள்ளிகள் திறக்கப் படாத நிலையில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை மாணவர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில் மாநிலத் தலைவராக லால்குடி திருநாவுக்கரசு, பொதுச்செயலாளராக கன்னியாகுமரி கிறிஸ்டோபர் தங்கராஜ் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x