Published : 23 Nov 2020 03:13 AM
Last Updated : 23 Nov 2020 03:13 AM
வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. 2 நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற மொத்தம் 46 ஆயிரத்து 321 பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களிலும் கடந்த 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 12,34,864 வாக்காளர்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதி களில் 9,38,692 வாக்காளர்களும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 10,03,769 வாக்காளர்கள் உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நவம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் சிறப்பு முகாமும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் சிறப்பு முகாமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நவம்பர் மாதத்துக்கான வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முதல் நாளில் 3 மாவட்டங்களில் மொத்தம் 18 ஆயிரத்து 488 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2-ம் நாளாக நேற்று சிறப்பு திருத்த முகாம் 1,702 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.
2-ம் நாள் சிறப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 11 ஆயிரத்து 740 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 9,847 பேர் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதி களில் 6,246 பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மொத்தமாக 46 ஆயிரத்து 321 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற, அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி மையங்களில் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT