Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) நா. முருகப்பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5-ம் வகுப்புவரை பயின்ற, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளை வட்டாரத்துக்கு ஒருவர் வீதம் தேர்வுசெய்து, அவர்களுக்கு அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் கல்வி வழங்கப்படும். மேலும், அதிக மதிப்பெண்பெற்ற 3 மாணவிகள் உட்பட 10பேருக்கு சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் பிளஸ் 1, பிளஸ் 2வகுப்புகள் நடத்தப்படும். தகுதியுள்ளவர்கள் தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), 2-ம் தளம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628101 என்றமுகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT