Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

கேங்மேன் பணியிடம் நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி

மின் வாரியத்தில் 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்பக் கோரி, கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மின்சார வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக் குழு உறுப்பினர் சக்தி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் இளவரசன், முருகன், ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மாவட்ட செயலாளர் சுரேஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், 10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் வாரியத்தை தனியார்மயம் ஆக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x