Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM
மழை, வெள்ள பாதிப்பைத் தடுக்க தூத்துக்குடி மாநகரில் சரியான திட்டமிடல் இல்லை என்று கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள தனசேகரன் நகர், பி அண்ட் டி காலனி, ஜார்ஜ் ரோடு, லசால் தெரு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை தொகுதி எம்பி கனிமொழி நேற்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சியின் பல பகுதிகளில் தண்ணீர் நிரம்பி, வீடுகளுக்குள் வெள்ளம் புகும் நிலை தொடர்ந்து வருகிறது.திமுக ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பாதி வேலைகள் முடிந்திருந்தன.
அதன் பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இத்தனைஆண்டுகளாக மீதமுள்ள பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை முடித்திருந்தால் கூட, மழைநீர் வடிய வாய்ப்பு இருந்திருக்கும். முடிக்காததால் ஆண்டு தோறும் இப்பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மழைநீர் வடிகால்அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் தண்ணீர் எந்தப் பக்கம் போகும், எங்கு வடியும் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அமைக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அடைப்புகள்ஏற்பட்டு தண்ணீர் செல்ல வழியில்லை. எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் வேலைகள் நடைபெறுகிறது. மழை வருவதற்கு முன் வடிகால்களை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியும் அவர்கள் செய்யவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT