Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் சங்கர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலை வாய்ப் பற்றவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 30 நாட்களுக்கான இருசக்கர வாகன பழுது நீக்கும் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் 35 பயிற்சியாளர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சி, அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சிக்கான வயது 18 முதல் 45 வரை. சுய உதவிக் குழுக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயிற்சி காலங்களில் காலை, மதிய உணவு, தேநீர், பிஸ்கட் ஆகிவை பயிற்சி நிறுவனத் தால் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது
எனவே சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டிடம், கேஆர்பி டேம், கிருஷ்ணகிரி என்ற முகவரியை அணுகலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT