Published : 19 Nov 2020 03:15 AM
Last Updated : 19 Nov 2020 03:15 AM
திருப்பத்தூர் அருகே திரியாலம் கிராமத்தில் கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால நடுகல் மற்றும் சதிக்கல் கண்டெடுக் கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் முனைவர் பிரபு மற்றும் தொல்லியல் ஆய் வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன் ஆகியோர் திருப்பத்தூர் அடுத்த திரியாலம் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கள ஆய்வு நடத்தினர். அப்போது, மண்டபம் என்ற இடத் தில் நடுகல் மற்றும் சதிக்கல் இருப்பதை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட் டத்தில் எண்ணற்ற தொல்லியல் தடயங்கள் கிடைத்துக் கொண்டே உள்ளன. இந்நிலையில், திருப்பத்தூர் அடுத்த திரியாலம் அருகேயுள்ள மண்டபம் என்ற சிறிய கிராமத்தில் விவசாய நிலங் களுக்கு அருகே நடுகல் இருப்பதை கள ஆய்வின்போது கண்டறிந் தோம். இக்கல்லானது 5 அடிநீளமும், 3 அடி அகலமும் கொண்ட தாக உளளது.
நடுகல்லில் உள்ள வீரன் தனது வலது கையில் வாளும், இடது கையில் வில், அம்பு மற்றும் 3 ஆபரணங்களை அணிந்துள் ளார். தனது தலையில் தலைப் பாகையினை சூடியுள்ளார். இதை வைத்துபார்க்கும்போது இந்த வீரன் படைத்தளபதியாக இருந் திருக்கக்கூடும்.
வீரனது முகம் கோபமாக காட்டு வதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 அடுக்குகளை கொண்ட காப்பினை 2 கைகளின் மேற்புறத்திலும், 4 அடுக்குகளைக்கொண்ட காப் பினை மணிக்கட்டுகளிலும் அணிந்துள்ளார். வீரனின் கால் களில் வீரக்கழல் காணப்படுகின் றன. காதுகளில் பத்தரகுண்டலம் அணிந்துள்ளார். இடுப்பில் இடைக் கச்சுடன் கூடிய சிறிய கத்தி ஒன்றும் உள்ளது. வீரன் எதிரிகளிடம் சண்டை யிடும்போது உயிர் துறந்திருக்கக் கூடும் என தெரிகிறது. எனவே, வீரனின் வீரச் செயலைப்போற்றும் வகையில் இந்த நடுகல் வடிவமைக் கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்தகல்லினை ‘வேடியப்பன்’ என அழைக்கின்றனர்.
இந்த நடுகல்லுக்கு அருகாமை யில் ஒரு பெண் உருவம் பொறிக்கப்பட்ட சிற்பம் ஒன்றும் உள்ளது. இந்த சிற்பம் மூன்றரை அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. பெண் தனது வலது கையில் மலர்செண்டினை ஏந்தியவாறு உள்ளது. அவளது முகம் சோகத்தை பிரதிபலிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த காலங்களில் போருக்கு செல்லும் ஆண்களுக்கு பெண்கள் மலர் செண்டினைக்கொடுத்து, ‘போரில் வெற்றியுடன் திரும்புக’ என வாழ்த்தி வழி அனுப்புவது வழக்கமாக இருந்தது.
அதன்படி இங்குள்ள நடுகல்லில் இருப்பது, வீரனின் மனைவியாக இருக்கக் கூடும். வீரன் மறைந்தவுடன் அவரது மனைவியும் உயிர் துறந்திருக்கக் கூடும். எனவே, வீரனுக்கு அருகா மையில் அவரது மனைவியின் சிற்பமும் செதுக்கி வைக்கப்பட் டுள்ளது. இந்த நடுகல்லானது கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அதாவது, பிற்கால சோழர் காலத்தைய கலைப் பாணியில் இந்த சிற்பம் செதுக்கப் பட்டுள்ளது. வீரனும், அவரது மனைவியும் அணிந்துள்ள ஆபரணங்கள் சோழர் காலத்து கலை பாணியை ஒத்திருப்பதால் இவை சோழர் காலத்தைச் சேர்ந் தவையாக இருக்கலாம்.
நடுகல்லில், விழி பிதுங்கிய கண்களுடன் வீரனை காட்சிப் படுத்திய பாங்கு சிறப்புக்குரியதாகும். வீரனது நெற்றியில் பட்டை பூசப்பட்டுள்ளதால் இவர் ஒரு சிவ பக்தர் என்பதையும் அறிய முடிகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்று பின்புலத்தினை எடுத்துக்காட்டுவதாக இந்த நடுகல் அமைந்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT