Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ராமன் வெளியிட்டார்.படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 91,05,338 வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ராமன், வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

கெங்கவல்லி சட்டப்பேர்வை தொகுதியில் (தனி) 2,34,224 வாக்காளர்களும், ஆத்தூர் (தனி) 2,49,570, ஏற்காடு (தனி) 2,79,529, ஓமலூர் 2,90,451, மேட்டூர் 2,81,387, எடப்பாடி 2,80,398, சங்ககிரி 2,68,425, சேலம் மேற்கு 2,94,058, சேலம் வடக்கு 2,72,140, சேலம் தெற்கு 2,56,095, வீரபாண்டி 2,55,291 என மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 14,79,280 ஆண்கள், 14,82,124 பெண்கள், இதரர் 164 பேர் என 29,61,568 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்லில் பெண்கள் அதிகம்

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14 லட்சத்து 25 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6 லட்சத்து 96 ஆயிரத்து 23 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 720 பெண் வாக்காளர்களும், 140 இதர வாக்காளர்களும் உள்ளனர். இதில் 3,380 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 2,944 பேர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் கோட்டாட்சியர் எம். கோட்டைக்குமார் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் 19 லட்சம் பேர்

ஈரோட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 19 லட்சத்து 16 ஆயிரத்து 809 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 213 வாக்காளர்களும், ஈரோடு மேற்கு தொகுதியில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 822 வாக்காளர்களும், மொடக்குறிச்சி தொகுதியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 390 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 51 வாக்காளர்களும் உள்ளனர்.

பவானி தொகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 62 வாக்காளர்கள், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 941 வாக்காளர்கள், கோபி தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 90 வாக்காளர்கள், பவானிசாகர் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 467 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 14 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 2, 215 வாக்குச்சாவடிகள் உள்ளன, என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், வட்டாட்சியர் (தேர்தல்) சிவகாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டார். அப்போது ஆட்சியர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), பர்கூர், வேப்பனப்பள்ளி, ஓசூர் மற்றும் தளி உட்பட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 65 ஆயிரத்து 544. இதில் 7 லட்சத்து 91 ஆயிரத்து 143 பேர் ஆண்கள், 7 லட்சத்து 74 ஆயிரத்து 160 பேர் பெண்கள், 241 பேர் இதர வாக்காளர்கள்.

இந்த பட்டியல் மாவட்டத்தில் உள்ள 1863 வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., கிழக்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தன், கிழக்கு மாவட்ட அதிமுக மாணவரணி தலைவர் நந்தகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரமோகன், தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தருமபுரி

தருமபுரியில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 35 ஆயிரத்து 534. இதில் ஆண்கள் 6 லட்சத்து 27 ஆயிரத்து 332, பெண்கள் 6 லட்சத்து 8 ஆயிரத்து 64, இதர வாக்காளர்கள் 138 பேர், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x